Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரூ.130 கோடி பட்ஜெட்டில் ‘தளபதி 65’! 

இளையதளபதி விஜய்யின் 65வது படமாக ‘தளபதி 65’ ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் கையெழுத்திட்டிருப்பதாகவும், படத்தின் பட்ஜெட் ரூ.130 கோடி என்று  திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தற்பொழுது கொரோனா பொது  முடக்கத்தான் விஜய் நடிக்கும் மாஸ்டர் படபிடிப்பு ஆனது நிறுத்தப்பட்ட நிலையில் அவரது அடுத்த படத்திற்கான ஒப்பந்தம் ரெடியாகி வருகிறது. 

எனவே விஜய்-முருகதாஸ் கூட்டணி ஆனது துப்பாக்கி, கத்தி, சர்கார் என மூன்று வெற்றிப்படங்களைக் கொடுத்த கூட்டணி மீண்டும் 4-வது முறையாக இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

 

Exit mobile version