அதிமுகவை சாய்க்க சசிகலாவும் ஸ்டாலினும் கூட்டுச் சதியா?

0
120

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் மார்க்கெட் மற்றும் அம்மா உணவகத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை தேனி மாவட்ட வடக்கு திமுக பொருளாளர் தங்கத்தமிழ்செல்வன் ஆய்வு செய்திருக்கிறார். அதன் பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது. அதிமுகவை வழிநடத்த தெரியாமல் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்டோர் தவித்து வருகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். அவர்கள் தங்களுடைய தகராறுகளை தீர்த்து வைக்குமாறு தான் டெல்லிக்குச் சென்று முறையிட்டு இருக்கிறார்கள். சென்ற பத்து வருட காலமாக போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதிக்கு செய்யாத திட்டங்களை தற்சமயம் பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதனை நான் நேரில் சென்று அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி வருகிறேன் என்று தெரிவித்திருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்.

நான் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக பண்ணீர் செல்வம் சொல்வதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை என்று தெரிவித்து இருக்கிறார். சசிகலா தனிப்பட்ட குடும்பம் அதிமுக அதை கைப்பற்ற இயலாது என பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். விரைவில் சசிகலா அதிமுக அழைக்கப்படுவார் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

அதோடு தொடக்கத்திலிருந்தே ஓபிஎஸ் டிடிவி தினகரன் ஆதரவாளர் என தெரிவித்த அவர், சட்டசபை தேர்தலில் கூட எந்த ஒரு பிரச்சாரத்திலும் பன்னீர்செல்வம் சசிகலா தொடர்பாக விமர்சனம் செய்யவில்லை. டிடிவி தினகரனுடன் ஒன்றிணைந்து தான் என்னை தோற்கடித்தார் என்று சொல்லியிருக்கிறார். இன்றும்கூட ஓபிஎஸ் சசிகலாவின் விசுவாசியாக தான் இருக்கிறார் சசிகலா தற்சமயம் சுற்றுப்பயணம் செய்தால் ஓபிஎஸ் குடும்பமே சென்று அவருடைய காலில் விழும் கட்சியில் இணைவார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இவருடைய இந்த பேச்சை பார்த்தால் ஒருவேளை திமுகவும், சசிகலாவும், ரகசியமாக கூட்டு வைத்துக்கொண்டு அதிமுகவை நிர்மூலமாக்க திட்டமிடுகிறார்கள்? என்ற எண்ணமும் தோன்றுகிறது.அத்துடன் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சசிகலா அந்த கட்சியை பெரிய அளவில் விமர்சனம் செய்யவில்லை. ஏதோ ஒப்புக்கு அவ்வப்போது ஏதாவது ஒரு குறைகளை சொல்லி வருகிறார். ஆணித்தனமாக அந்தக் காட்சியை அவர் எந்த ஒரு விமர்சனமும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.