பிரபல இயக்குநருக்கு பலாபழத்தை அன்பளிப்பாக கொடுத்த தங்கர் பச்சான்!
இயக்குநர் தங்கர் பச்சான் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள கருமேகங்கள் கலைகின்றன படத்தின் இசை விளியீட்டு விழாவில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு பலாப் பழத்தையும், முந்திரிகளையும் அன்பளிப்பாக அளித்துள்ளார் இயக்குநர் தங்கர் பச்சான் அவர்கள்.
இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கியுள்ள கருமேகங்கள் கலைகின்றன படத்தில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், மம்தா மோகன்தாஸ், யோகி பாபு, பாரதி ராஜா, எஸ்.ஏ சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதையடுத்து இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
கருமேகங்கள் கலைகின்றன படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் தங்கர் பச்சான் அவர்கள் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு பலா பழத்தையும், முந்திரியையும் அன்பளிப்பாக கொடுத்தார். பிறகு பேசிய அவர் “இந்த பலா பழமும், முந்திரியும் எனது தோட்டத்தில் விளைந்தவை. இந்திய சினாமாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வளர்ந்து வருகிறார். அது நமது அனைவருக்குமே பெருமையான விஷயம்” என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களை பாராட்டி பேசியுள்ளார்.