தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கிவரும் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் இருந்து பல கண்டன குரல்கள் இருந்து வருகின்றன. அதோடு முக்கிய அரசியல் கட்சிகளும், முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும், இதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.அதோடு மட்டுமல்லாமல் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை அவர்களும் கர்நாடக அரசுக்கு எதிராக தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருக்கின்றார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் கர்நாடகத்தில் ஆளும் கட்சியாக இருப்பது பாரதிய ஜனதா கட்சி தான் .ஆகவே அந்த கட்சியை சார்ந்த தலைவரே இதற்கு கண்டனம் தெரிவித்து இருப்பது பாஜக இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முயற்சி செய்யும் கர்நாடக அரசை கண்டித்து கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக தஞ்சாவூரில் வருகின்ற ஆறாம் தேதி அதாவது நாளைய தினம் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் நடைபெற இருந்த இந்த போராட்டத்திற்கு நோய்த்தொற்று தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதை காரணமாக, தெரிவித்து காவல்துறையினர் அனுமதி வழங்க மறுத்து விட்டார்கள்.
நோய்த்தொற்று பரவல் பெருமளவு குறைந்து வருகிறது இந்த நிலையில், ஜூலை மாதம் 31ம் தேதிக்கு பின்னர் இயல்பு நிலை ஏற்படும் சூழல் இருந்ததன் காரணமாக, அந்த கட்சியின் சார்பாக இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்சமயம் நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை காரணம் காட்டி போராட்டத்திற்கு அனுமதி வழங்க இயலாது என்று காவல்துறையினர் எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.
உலக சுகாதார நிறுவனம், மருத்துவ நிபுணர்கள் போன்றோரின் புதிய எச்சரிக்கைகளை பொறுப்புள்ள அரசியல் கட்சியாக நினைவில் வைத்து கழக உடன்பிறப்புகள், விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நலன் கருதியும், இந்த போராட்டத்தால் நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து விட கூடும் என்ற அக்கறையுடனும், ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுவதாக இருந்த போராட்டத்தை தள்ளி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேகதாது அணையை எப்படியாவது தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டு வருகிறோம். அதன் காரணமாகவே போராட்டகளத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக நாம் அனைவரும் உறுதியுடன் இருப்பதோடு விரைவில் நோய்த்தொற்று தாக்கம் குறைந்த உடனேயே மறுபடியும் இதே போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.