crime: நகை செய்து மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவியை தஞ்சை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் ஞானம் நகரில் தங்க நகை அடகு கடை வைத்து இருப்பவர் தான் பசுபதி(55). இவரது கடைக்கு நகை அடகு வைப்பதற்கு கடந்த நவம்பர்-29 தேதி சேலத்தை சேர்ந்த பெண் ஒருவர் வந்து இருக்கிறார். அந்த சமயம் அடகு கடையில் பெண் ஊழியர் ஒருவர் மட்டும் இருந்து இருக்கிறார். அவரின் அந்த பெண் 2 பவுன் தங்கம் அடகு வைத்து இருக்கிறார்.
அந்த தங்க நகைக்காக அடகு தொகை ரூ.87 ஆயிரம் ரூபாய் கொடுத்து இருக்கிறார் நகைக்கடை பெண் ஊழியர். அந்த பணத்தை பெற்றுக் கொண்டு மாயமாகி இருக்கிறார் அந்த பெண். இந்த நிலையில் தனது கடைக்கு வந்த பசுபதி அந்த பெண் கொடுத்த 2 பவுன் நகையை சோதித்து பார்த்து நகை போலி என தெரிய வந்த உடன் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.
உடனே தஞ்சை காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். போலீசார் அந்த நகை கடை அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்து பார்த்து இருக்கிறார்கள். அதில் இந்த பண மோசடி செய்து இருப்பது சேலம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி வெங்கடேஷ்(46), சகுந்தலா(39) என்பது தெரிய வந்திருக்கிறது.
மேலும் போலீசார் அந்த தம்பதிகளை கைது செய்து விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில் தங்க நகை போலி என தெரியாமல் இருக்க ஒரு கிராம் தங்கத்தை உருக்கி நகையுடன் சேர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் போலி தங்க நகைகள் அவர்களுக்கு எப்படி கிடைத்து இருக்கிறது என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.