மது, போதை பொருளுக்கு தடை! தமிழகத்தை திரும்பி பார்க்கவைத்த கிராமம்! அசத்தும் இளைஞர்கள்!

0
192
thanjavur village youngster

தஞ்சை அருகே தங்களது கிராமத்தில் மது மற்றும் போதைப் பொருளுக்கு தடை விதிப்பதாக இளைஞர்கள் அடித்த விழிப்புணர்வு போஸ்டர் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டம், பொன்னப்பூர் கிழக்கு கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், தங்கள் ஊருக்குள் மது உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது ஒரு மனதாக முடி வெடுத்துள்ளனர்.

மேலும், அந்த கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மது உள்ளிட்ட எந்தவிதமான போதைப் பொருளையும் விற்க தடை செய்யப்பட்டுள்ளது, மீறி விற்றாலோ விற்பனைக்குத் துணை போனாலோ அது இந்த கிராமத்துக்கு நீங்கள் செய்யும் துரோகம் என்று போஸ்டர், கட்-அவுட் வைத்துள்ளனர்.

பல குடும்பங்களின் பாவ செயலில் ஈடுபடாதீர்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக அந்த போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.

மேலும், வீடு வீடாகச் சென்று மது – போதைப் பொருட்களுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை வழங்கி தங்களது கிராம மக்களிடம் விழிப்புணர்வும் செய்து வருகின்றனர் அந்த இளைஞர்கள்.

இளைஞர்களின் இந்த முடிவுக்கு அக்கிரமத்தை சேர்ந்த மற்ற இளைஞர்களும், பெரியவர்களும், பெண்கள் 100 சதவீதம் வரவேற்பு கொடுத்து கடைபிடிக்க தொடங்கியுள்ளனர்.

இந்த கிராமத்தின் எல்லை பகுதி, பஸ் நிறுத்தம், மளிகை கடைகள், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட அணைத்து பகுதிகளிலும் இந்த விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இதனை பார்க்கும் மற்ற கிராம மக்களும் இதனை பார்த்து திருந்த வாய்ப்பு உள்ளதாக கூறும் அக்கிரம இளைஞர்கள், கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தை உயர்த்த மது-போதை பொருளை ஒழிக்க வேண்டும் என்கின்றனர்.

இந்த இளைஞர்களின் விழிப்புணர்வு கட்-அவுட், போஸ்டர்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி, பலரும் பாராட்டி வருகின்றனர்.