ரூ. 2000 மாத உதவித்தொகையுடன், +2 முடித்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு!!

0
137

தஞ்சாவூரில் தமிழ் பல்கலைகழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்பு தமிழ் படிக்க மாதந்தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1983 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தஞ்சாவூரில் இது 972 புள்ளி 7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

தமிழ், பண்பாடு, மொழி போன்ற துறைகளில் உயர் ஆய்வை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது. மேலும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உருவ அமைப்பில் தமிழ்நாடு என்ற சொல்லின் எழுத்துக்களைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு இளங்கலை படிப்புடன் 2 ஆண்டு முதுகலை படிப்புகள் பல பாடப்பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் அதில் இளங்கலை மற்றும் முதுகலை என ஒருங்கிணைந்த ஐந்தாண்டு தமிழ் பயிலும் மாணவர்களுக்கு அரசு உதவியுடன் மாதந்தோறும் உதவித்தொகை 2 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் இந்த படிப்பில் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை குறித்து பல்கலைக்கழகம் துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் கூறும்போது தமிழ் பாடப் பிரிவில் 2 ஆண்டு முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 2000 ரூபா உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் தமிழ் பல்கலைகழகத்தில் இந்த படிப்புகளை மட்டுமில்லாமல் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு வரலாறு படிப்பை பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் படிக்கலாம் என்று கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து முதுகலையில் பண்டைய வரலாறு, மொழியியல் மற்றும் தொல்லியல், மெய்யியல் நிகழ்வுகளை மற்றும் சுற்றுச்சூழல் மூலிகை அறிவியல் ஆகிய படிப்புகளுக்கு சேர அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதனை குறித்த கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை காணலாம். மேலும் 2,000 உதவித்தொகையுடன் இப் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.