Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இரண்டு ஆண்டுகளாக நிதித்துறை அளித்ததற்கு நன்றி!! உருக்கமாக பதிவிட்ட பி.டி.ஆர்!!

#image_title

இரண்டு ஆண்டுகளாக நிதித்துறை அளித்ததற்கு நன்றி!! உருக்கமாக பதிவிட்ட பி.டி.ஆர்!!
அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டு புதிய துறை கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக மன்னார்குடியை சேர்ந்த டி.ஆர்.பி ராஜா அவர்கள் பதிவியேற்றுக் கொண்டார். இவருக்கு தொழில் துறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 அமைச்சர்களுக்கு அவர்களின் பதவி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதில் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களிடம் இருந்த நிதித்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு அதற்கு பதிலாக தகவல் தொழில்நுட்பத் துறை பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அவரது டுவிட்டர் பக்கத்தில் கடந்து இரண்டு ஆண்டுகள் என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத நிறைவான  ஆண்டுகளாகும். வரலாறு காணாத அளவில் சமூக நலத்திட்டங்களிலும், மூலதனச் செலவினங்களிலும் முதலீடு செய்துள்ளோம். இதை என் பொது வாழ்விலும், என் வாழ்கையிலும் மிகச் சிறப்பான பகுதியாக கருதுகின்றோம்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Exit mobile version