Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விந்து தானம் செய்யும் கதாநாயகன்! ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு!!

விந்து தானம் செய்யும் கதாநாயகன்! ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு!!

ஹரிஷ் கல்யாண் புதிதாக நடிக்கும் படத்தின் படத்திற்கு தாராளப் பிரபு என பெயர் சூட்டப்பட்டுள்ளது இந்த படத்தின் மையக் கதை விந்து தானம் செய்வது பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் ஆறு வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் விக்கி டோனர்.  இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றதற்கு முக்கிய காரணம் அதன் கதைக்களன். விந்து தானம் செய்யும் கதாநாயகன் ஒருவன் சந்திக்கும் பிரச்சினைகளே இப்படத்தின் மையக்கரு. இந்த வித்தியாசமான கதை ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி வசூலை அள்ளியதுடன் விருதுகளையும் தட்டிச்சென்றது.

பாலிவுட்டின் முக்கிய வளரும் நட்சத்திரமாக உருவாகி வரும் ஆயுஸ்மான் குர்ரானா முதன்முதலாக அறிமுகமான திரைப்படம் இது.  இதையடுத்து 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு இருக்கிறது. விந்து தானம் செய்யும் கதாநாயகனாக நடிக்க தயங்கிய நிலையில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் தைரியமாக நடித்துள்ளார். இதன் முதல் லுக் போஸ்டர் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் தடம் படத்தில் நடித்த தன்யா ஹோப் மற்றும் நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விந்து தானம் பற்றிய படம் என்றாலும் ஆபாசமாக இல்லாமல் குடும்பத்துடன் அனைவரும் பார்க்கும் படமாக இதை உருவாக்கி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது குடும்பமாக வந்து ரசிகர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ இளைஞர்களின் ஆதரவு இந்த படம் பெற்றுவிடும் என்பது சமூக வலைதளங்களில் அது பெற்றுள்ள வரவேற்ப்பை பார்த்தாலே தெரிகிறது.

Exit mobile version