Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம், ஷெரினுடன் நட்பு, இரண்டுமே உண்மைதான்: தர்ஷன் ஒப்புதல்

பிக்பாஸ் தர்ஷன் தன்னுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக நேற்று நடிகை சனம் ஷெட்டி சென்னை காவல்துறை ஆணையத்தில் புகார் கொடுத்த நிலையில் தற்போது தனது தரப்பு விளக்கத்தை செய்தியாளர்களிடம் தர்ஷன் தெரிவித்துள்ளார்

சனம்ஷெட்டியை தீவிரமாக காதலித்து அவருடன் நிச்சயதார்த்தம் செய்தது உண்மைதான் என்றும், ஆனால் நிச்சயதார்த்தத்துக்கு பிறகு அவர் மிகவும் மாறி விட்டதால் அவரை பிரேக் அப் செய்ய முடிவு செய்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது சக பெண் போட்டியாளர்கள் இடம் பேசக்கூடாது என்றும், நான் நடிக்கும் படத்தில் தன்னையே ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்த வேண்டும் என்று பல விதங்களில் அவர் தனக்கு டார்ச்சர் கொடுத்ததாகவும், இதையெல்லாம் செய்யாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதாகவும், தன்னை மனரீதியாக அவர் துன்புறுத்தியதாகவும் இதற்கெல்லாம் ஆதாரம் இருப்பதாகவும் தர்ஷன் தெரிவித்தார்

மேலும் ஷெரினுடன் தனக்கு நட்பு இருப்பது உண்மைதான் என்றும் ஆனால் அந்த நட்பு ஒரு எல்லையில் இருப்பதாகவும் அதை புரிந்து கொள்ளாமல் ஷெரினுடன் பேசக்கூடாது என்று சனம் ஷெட்டி கூறியதால் தனக்கு மனவருத்தம் அடைந்ததாக கூறினார்

மேலும் சனம் ஷெட்டிக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருந்ததாகவும் அவருடன் தற்போதும் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் தர்ஷன் குற்றஞ்சாட்டினார். மேலும் தனக்கு ரூபாய் 15 லட்ச ரூபாய் செலவு செய்ததாக சனம்ஷெட்டி செய்தி கூறியது பொய் என்றும் அவர் தனக்காக மூன்றரை லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்ததாகவும் அந்த பணத்தையும் தான் பிக்பாஸ் பணம் வந்தவுடன் கொடுத்து விட்டதாகவும் சனம்ஷெட்டியிடம் இருந்து வேறு எந்த பணமும் தான் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்

Exit mobile version