பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கமலின் அந்த ஒரு பாடல் – அது என்ன பாட்டுன்னு தெரியுமா?
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நடிகர் கமல்ஹாசனை அவரது ரசிகர்கள் நவரச நாயகன் என்றும், உலக நாயகன் என்றும் அன்போடு அழைக்கின்றனர்.
நடிகர் கமல்ஹாசன் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் குழந்தை பருவத்திலிருந்து இன்று வரை நடித்து வருகிறார். ‘16 வயதினிலே’ படம் கமலுக்கு நிறைய ரசிகர் பட்டாளத்தை கூட்டியது. ஆண்கள் ரசிகர்களை விட பெண் ரசிகைகள் நடிகர் கமலுக்கு அதிகமாக இருந்தனர்.
தற்போது இவர் தமிழகத்தில் தனியாக அரசியல் கட்சி தொடங்கி தேர்தல்களை எதிர்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு கமல் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் வெளியானது. இப்படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.
1981ம் ஆண்டு ராஜபார்வை என்ற படத்தில் கமல் நடித்தார். இப்படத்தை சங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்க, கமலுக்கு ஜோடியாக நடிகை மாதவி நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ‘அந்திமழை பொழிகிறது..ஒவ்வொரு துளியில் உன் முகம் தெரிகிறது…’ என்ற பாடல் வைரமுத்து எழுத, சூப்பர் டூப் ஹிட்டடித்தது.
இப்படத்தில் கமல் கண் தெரியாதவராய் நடித்திருப்பார். ஆனால், இப்பாடலில் எஸ்.பி.பி பாடல் பாட, அதற்கு கமல் வயலின் வாசிப்பார். கதைப்படி கதாநயகனான கமல் கண் தெரியாதவர். அவர் எப்படி மழைதுளிகளை பார்த்திருக்க முடியும் என்ற சர்ச்சை அப்பொழுது எழுந்தது.
இந்த சர்ச்சைக்கு கவிஞர் வைரமுத்து அழகாக பதிலளித்தார். கதைப்படி வேண்டுமானால் கமல் பார்வையற்றவராக இருக்கலாம். ஆனால், பாட்டு பாடுவது எஸ்.பி.பி.. அப்பாடலை கமல் வயலின் வாசிக்குபோது உள்வாங்கி கற்பனையில் வந்ததுதானே தவிர இப்பாடல் பாடியது கமல் கிடையாது என்று பதில் சொன்னார்.