16-வது ஆசிய திரைப்பட விருதுகள் விழா! பொன்னியின் செல்வன் ஆறு பிரிவுகளில் பரிந்துரை!
ஹாங்காங்கில் நடைபெறும் 16 வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படமானது ஆறு பிரிவுகளின் கீழ் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மறைந்த எழுத்தாளர் கல்வி எழுதிய புதினம் தான் பொன்னியின் செல்வன். இதனை பல்வேறு இயக்குனர்கள் படமாக எடுக்க முயன்று, இறுதியில் மணிரத்தினம் அந்த படத்தை இயக்கி வெற்றி பெற்றார்.
மணிரத்தினம் இயக்கி ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பிரகாஷ்ராஜ்,ஐஸ்வர்யா ராய், திரிஷா, உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்து கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி திரையில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படமாக பொன்னியின் செல்வன்-1 திகழ்ந்தது.
பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்தினம் இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார். இரண்டாவது பாகம் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் மாதம் 2023 திரைக்கு வர இருக்கிறது. தற்போது அதற்கான ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் மார்ச் 12ஆம் தேதி ஹாங்காங்கில் நடைபெறும் 16 வது ஆசிய விருதுகள் வழங்கும் விழாவில் பொன்னியின் செல்வன் திரைப்படமானது ஆறு பிரிவுகளின் கீழ் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுக்கு போட்டியிடும் திரைப்படங்களின் பெயர்கள் மற்றும் கலைஞர்களின் பெயரை ஆசிய விருது அகாடமி ஹாங்காங்கில் நேற்று தெரிவித்தது. பொன்னியின் செல்வன் சிறந்த இசை, சிறந்த படம், சிறந்த எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்குனர், சிறந்த உடை அலங்காரம் ஆகிய ஆறு பிரிவுகளுக்கு பொன்னியின் செல்வன் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.