Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வில்லனாக நடித்த பிரபலமான நடிகர் பப்லுவின் 58 வயது காதல் தோல்வி!!

The 58-year-old love failure of popular actor Bablu who played the villain!!

The 58-year-old love failure of popular actor Bablu who played the villain!!

குழந்தை நட்சத்திரமாக மின்னிய பிரபல நடிகர் பப்லு பிரித்திவிராஜ். சிறு வயது மிக அழகாக தோற்றமளித்ததால் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், லதா நம்பியார் போன்ற பெரிய நடிகர்களுடன் அச்சிறுவயதிலேயே நடித்தவர். மேலும், பருவத்தில் ஹீரோவாக நடிக்க பல முயற்சிகள் செய்தும் தோல்வியுற்றார். குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார். பின்னர் ‘பெல்லி’ என்ற தெலுங்கு ரீமேக் படமான ‘அவள் வருவாளா’ படத்தின் மூலம் இவர் கவரப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, பல படங்களில் வில்லனாக நடித்து தன் திறமையை வெளிக்காட்டினார். ‘அவள் வருவாளா’ திரைப்படத்திற்காக ‘சிறந்த வில்லன் நந்தி விருது’ பெற்றுள்ளார்.இவர் நடிப்புடன் சேர்த்து, ‘இவரது பிசினஸிலும் முழு கவனம் செலுத்தி வந்தார்’. பல தொடர்களில் நடித்து சின்ன திரையில் பிரபலமானவர். தற்போது இவர் விஜய் சேதுபதி நடிப்பில் ‘ஏஸ்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் புது நாடகம் ஒன்றிலும் கமிட்டாகி உள்ளாராம்.

இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு ‘பீனா’ என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ‘அகிட்’ என்ற மகன் உள்ளார். இவர் ‘ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டதனால்’ இவரது பெற்றோர்கள் மறு குழந்தை வேண்டாம் என இருந்தார்கள். மகன் மீது உயிரை வைத்திருந்தாலும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து பப்லு, 25 வயதான ஷீத்தல் என்பவரை காதலித்தார். அப்பெண்ணின் பிறந்தநாளுக்காக இவர் பல லட்சம் செலவழித்து கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் வெளிவரவில்லை. எனினும், ஷீத்தல் அவரது வலைத்தளங்களில் இருவரும் சேர்ந்து எடுத்த போட்டோவை நீக்கி உள்ளார். அதைத்தொடர்ந்து ஷீத்தல் அவரது நண்பரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் கசிகிறது. ஷீத்தல் திருமண உடையில் உள்ளது போன்ற போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

Exit mobile version