சேலம் மாவட்டத்தில் கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து! இருவர் பலி!
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மானத்தாள் கங்காணிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்(32) அவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். செந்தில் நெசவுத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த அவருடைய உறவினர் சதீஷ்குமார் (33). அவர் தையல் தொழில் செய்து வருகிறார். மேலும் செந்தில் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரும் நேற்று மாலை சொந்த வேலை காரணமாக மேச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
மேலும் அங்கு அவர்களின் வேலை முடிந்தவுடன் இருவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சந்திரம்மாள் கடை பசு நிறுத்தம் பகுதியில் வந்த கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சேலம் இருந்து மேட்டூர் நோக்கி அரசு பேருந்தானது வந்து கொண்டிருந்தது. அரசு பேருந்தானது எதிர்பார விதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திலேயே செந்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் சதீஷ்குமார் படுங்காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தர். அக்கம் பக்கத்தினர் சதீஷ்குமாரையை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சதீஷ்குமாரும் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மேச்சேரி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பஸ் டிரைவரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண்ணிமைக்கும் நொடியில் நடந்த இந்த சம்பவத்தினால் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது.