Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிவேகத்தில் வந்த  யூடியூப் பிரபலத்தின் காரால் தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்! போலீசார் விசாரணை!

#image_title

அதிவேகத்தில் வந்த  யூடியூப் பிரபலத்தின் காரால் தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்! போலீசார் விசாரணை!

பிரபல யூட்யூபரின் கார் அதிக வேகமாக வந்து மோதியதால் தொழிலாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது,

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட கோனாதி முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி வயது 55.  காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் காவலாளியாக  இவர் பணிபுரிந்து வந்தார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் பத்மாவதி இரவு பணியை முடித்து விட்டு மறைமலைநகரில் உள்ள தனது மகளை பார்த்துவிட்டு மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடக்க முயற்சி செய்து கொண்டிருந்தபோது,  செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி அதிக வேகமாக வந்த கார் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் பத்மாவதி மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடி துடித்து பலியானார். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த பத்மாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் அசாருதீனிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  போக்குவரத்து புலனாய்வு போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய காரானது  பிரபல யூடியூபருக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அந்த விபத்து ஏற்படும் போது காரில் யூடியூபர் இருந்தாரா? அல்லது காரை டிரைவர் மட்டும் ஓட்டி வந்தாரா? என்பது குறித்து பல்வேறு தகவல்களை பரனூர் டோல்கேட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version