Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

50 வயதான பெயிண்டர் சிறுமியிடம் செய்த செயல்! கல்லால் தாக்கி கொடூர கொலை!

The act of a 50 year old painter girl! Brutal murder by stoning!

The act of a 50 year old painter girl! Brutal murder by stoning!

50 வயதான பெயிண்டர் சிறுமியிடம் செய்த செயல்! கல்லால் தாக்கி கொடூர கொலை!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். அவரது மகன் கோபால். 50 வயதான இவர் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. அவர் மனைவி, மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய பகுதியில் உள்ள ஒரு சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் உறவினர்கள் வேலை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த கோபாலை வீட்டருகே அழைத்து பேசி உள்ளனர்.

அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது ஒரு கட்டத்தில் முற்றி கைகலப்பாக மாறியது. எனவே பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து கோபாலை சரமாரியாக தாக்கி விட்டார்கள். சிறுமியின் உறவுக்கார பெண் கோபாலை கீழே தள்ளிவிடவே உடன் வந்த ஆண் அவரது தலையில் கல்லை போட்டு விட்டார். அதில் மயங்கி விழுந்த கோபாலை மேலும் வெறி தீர தாக்கி உள்ளனர்.

எனவே ரத்த வெள்ளத்தில் அங்கேயே துடிதுடித்து கோபால் இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கடையநல்லூர் போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த கோபாலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்த புளியங்குடி சிந்தாமணி பகுதியை சேர்ந்த மாரிப்பாண்டி என்பவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவருடன் இருந்த உறவினர் பெண்ணான வேல்தாய் என்பவரையும் கைது செய்துள்ளனர். இந்த கொடூரக் கொலை நடந்தபோது, அங்கிருந்த சிலர் அதை வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Exit mobile version