எம்ஜிஆர் மீது தீரா காதல் கொண்ட ரசிகர்கள் செய்த செயல்.. தமிழ்நாடே அதிர்ந்து போனது!!

0
86
#image_title

எம்ஜிஆர் மீது தீரா காதல் கொண்ட ரசிகர்கள் செய்த செயல்.. தமிழ்நாடே அதிர்ந்து போனது!!

தமிழ் திரையுலகில் ஜாம்பவானாக கொண்டாடப்பட்டவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர்.கடந்த 1936 ஆம் ஆண்டு ‘சதி லீலாவதி’ என்ற படத்தில் துணை நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து மலைக்கள்ளன்,அலிபாபாவும் 40 திருடர்களும்,ரிக்ஷகாரன்,உலகம் சுற்றும் வாலிபன்,அன்பே வா,அடிமை பெண்,நினைத்ததை முடிப்பவன்,எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கும் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.

இவரை திரையில் பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.கடந்த 1956 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடித்து வெளியான படம் மதுரை வீரன்.இப்படம் மதுரை வீரனின் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.இயக்குநர் யோகானந்த் இயக்கிய இப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடிகை பத்மினி நடித்தார்.

இப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் எம்ஜிஆர் இறந்து போவது போன்ற சீன் இடம் பெற்றது. இதை பார்த்து ஏற்றுக் கொள்ளாத ரசிகர்கள் பரமக்குடியில் ஒரு தியேட்டரை கொளுத்தி விட்டனர்.இதனால் வன்முறை ஏற்பட்டு தமிழ்நாடு முழுவதும் இருந்த மற்ற திரையரங்குகளில் பதற்றம் நிலவியது. எம்ஜிஆர் இறந்து போவது போன்ற காட்சிகளை நீக்க வேண்டும் அல்லது காட்சி மாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் படக்குழு தரப்பு இது வரலாற்று திரைப்படம் என்பதால் அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்க முடியாது என்று சொல்லிவிட்டனர்.அதன் பின் கடைசி காட்சியில் என் எஸ் கிருஷ்ணன் தோன்றி எம்ஜிஆர் அவர்கள் எங்கு செல்கிறார்,தெய்வமாக இருந்து நம்மளை பாதுகாக்க என்று கூறுவது போல் படத்தில் காட்சிகள் இடம் பெற்றது.இதன் பின்னர் பதற்றம் நீங்கி இந்த படம் நன்றாக ஓடி மிகப் பெரிய வெற்றி படமாக மாறியது.ரசிகர்களின் இந்த செயல் அந்த காலகட்டத்தில் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டது.