விமானத்துறையின் அதிரடி! இனிமேல் இவர்களுக்கு பயணம் இலவசம் !

0
140
The action of the aviation industry! From now on, they will travel for free!

விமானத்துறையின் அதிரடி! இனிமேல் இவர்களுக்கு பயணம் இலவசம் !

விமான பயணிகளுக்கு விருப்பத்துக்கு மாறாக இருப்பிடம் ஒதுக்கப்பட்டால் இழப்பீடு கோரலாம் என விமான போக்குவரத்துதுறை  ஆலோசனை செய்வதாக தகவல் வந்துள்ளது.

விமானங்களில் பயணம் செய்வோர் செல்ல வேண்டிய இடத்திற்கு சில நாட்கள் அல்லது சில மாதங்கள் முன்னதாகவே பதிவு செய்வது வழக்கம். அவ்வாறு விமானங்களில் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு, அவர்களுக்கு உரிய சீட்டினை ஒதுக்காமல் குறைந்த கட்டண பிரிவில் சீட் ஒதுக்கிடு செய்யப்படுகிறது.

மேலும் பயணிகளின் விருப்பம் இல்லாமல் இவ்வாறு சீட் ஒதுக்கப்படுவதாக  இது போல நடப்பதாக சிவில் விமான போக்குவரத்துத் துறைக்கு பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இவ்வாறு பல புகார்கள் வந்த நிலையில் விமானத்தில் பயணிக்க அனுமதி மறுப்பு,விமானம் ரத்து, விமானம் தாமதம் உள்ளிட்ட பல விதிகளில் திருத்தம் கொண்டு வர விமான போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. மேலும் பயணிகளின் விருப்பம் இல்லாமல் அவர்களுக்கு உரிய சீட்டினை விடுத்து குறைந்த கட்டண சீட் ஒதுக்கப்பட்டால் டிக்கெட் வரிகள் சேர்த்து முழுகட்டணம், அதற்கு அடுத்த வகுப்பில் இலவசமாக பயணிக்க சலுகை போன்ற பல்வேறு திட்டங்களை வழங்குவது குறித்த நடைமுறை   ஆகியவற்றை பற்றி விமான போக்குவரத்து துறை  ஆலோசித்து வருகிறது.