பள்ளி மாணவனை பெற்றோர் கண்டித்ததன் காரணமாக செய்த செயல்!

0
163
The action taken by the school student due to the reprimand of the parents!

பள்ளி மாணவனை பெற்றோர் கண்டித்ததன் காரணமாக செய்த செயல்!

செங்குன்றத்தை அடுத்த லட்சுமிபுரம், பாலசண்முகம் நகர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சிவசக்தி. 14 வயதாகும் இந்த மாணவன் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா நோய் தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடி இருந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சற்று குறைந்து உள்ளது.

அதன் காரணமாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த 1 ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதிலும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும்  சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டு தனிமனித இடைவெளியை பின்பற்றி நடத்தி வருகின்றனர். தற்போது பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் சிவசக்தி பள்ளிக்குச் செல்லாத காரணத்தினால் அவனது பெற்றோர் அவனை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்து, விரக்தி அடைந்த சிவசக்தி, நேற்று வீட்டில் யாரும் இல்லாமல் தனியாக இருந்த போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். எனவே இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழக அரசே மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் இல்லை என்றும், வராதவர்கள் வீட்டில் இருந்தே கற்கலாம் என்று அறிவித்த நிலையில், பெற்றோரின் இந்த கண்டிப்பினால் மாணவன் செய்த செயலினால் பெற்றோர் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். கொரோனா காலத்தில் பெற்றோர் எவ்வளவு மனவேதனை அடைந்து உள்ளோமோ? குழந்தைகளும் அவ்வளவு மனவேதனை அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. குழந்தைகளை அன்போடு அரவணைத்து செல்வோம்.