மத்திய அரசின் திட்டமான பிரதமர் கல்யாண் அண்ண யோஜனா மற்றும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு போன்ற திட்ட செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு அந்தத் திட்டம் தொடர்பாக காணொலிக் காட்சி மூலமாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் திட்ட துறையின் செயலாளர் சுதன்சு பாண்டே நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர் நோய் பரவல் இருக்கின்ற சூழலில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறும் பொதுமக்களில் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்க கூடியவர்களுக்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கும் பயனடைவது மாநில அரசுகள் உறுதி செய்வது அவசியம். இதனை மனதில் வைத்து நகர மற்றும் ஊரக பகுதிகளில் வாழ்ந்து வரும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கின்ற பிரிவை சார்ந்த பொதுமக்களை கண்டறிந்து அவர்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்ட குடும்ப அட்டை வழங்குவதற்கான சிறப்பு திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
தெருக்களில் குடியிருப்பவர்கள் குப்பைகளை சேகரிப்பவர்கள் திரு தெருவாக சென்று பொருட்களை விற்பனை செய்பவர்கள் சைக்கிள் ரிக்ஷா இழுப்பவர்கள் உள்ளிட்டவர்களை கண்டறியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறும் தனி நபர்களையும், குடும்பங்களையும் கண்டறிந்து ரேஷன் கார்டுகளை வழங்குவது போன்ற பொறுப்புகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இடம் தான் இருக்கின்றன.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதன் வழியாக மாதம் ஒன்றிற்கு நாடு முழுவதும் 1.35 கோடி மக்கள் பயன் பெறுகிறார்கள். ராஜஸ்தான், பீகார், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, அரியானா, மராட்டியம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இந்த திட்டத்தில் மாநில அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. ஆகவே இந்த திட்டத்தை நன்றாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக உணவுத்துறை அதிகாரிகளை தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.