சந்திரபாபு அவர்களின் அறிமுகமே நமக்கு தேவையில்லை. அந்த காலத்தில் ஒரு காமெடியன் என்றால் இவரைத்தான் புக் செய்வார்கள். அந்த காலத்திலேயே ஒரு காமெடியனுக்கு ஒரு லட்சம் சம்பளம் கொடுக்கப்படுகிறது என்றால் அது இவருக்காக தான் இருக்கும்.
அந்த அளவுக்கு எம்ஜிஆர் சிவாஜி அதற்கு அடுத்தது சந்திரபாபு படத்தில் இருக்க வேண்டும் என்று அனைத்து தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கருதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
MGR -யை வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற சந்திரபாபுவின் எண்ணம் நிறைவேறாமல் போனதால் மிகவும் கவலையுற்றது இருந்தார் சந்திரபாபு. இனிமேல் அந்தப் படம் வெளிவராது என்று கடன் கொடுத்த பினான்சியர்களும் அவரது கழுத்தை நெரிக்க தனது வீட்டின் பத்திரத்தை கொடுத்து விட்டாராம்.
அந்த காலத்திலேயே தனது பெட்ரூமிற்கு கார் வரும்படி அழகன் கட்டமைப்பை கொண்டு வீடு கட்டி இருந்தாராம் சந்திரபாபு.
அங்கு வந்த பினான்சியர்களிடம் அவர் வீட்டு பத்திரத்தை கொடுத்துவிட்டு, இந்த பத்திரத்தை வைத்து எவ்வளவு காசு வருமோ அந்த காசை எடுத்துக் கொள்ளுங்கள். இது இந்த படத்திற்கு கிடைத்த லாபம் என்று வைத்துக் கொள்ளுங்கள். மீதம் ஏதாவது காசு இருந்தாலும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.
அதன்பின் நேரடியாக விஸ்வநாதன் அவர்கள் வீட்டிற்கு சென்றாராம். அவரது மனைவிதான் இருந்தாராம். நான் மேலே தங்கிக் கொள்ளட்டுமா? என்று சந்திரபாபு கேட்க, தாராளமாக இது உங்கள் வீடு அண்ணா என, விஸ்வநாதன் மனைவி அவர்கள் சொல்ல அங்கேயே இருந்து விடுகிறார். சந்திரபாபு கீழே வரவேமாட்டாராம்
ஒரு சமயம் கண்ணதாசன் சந்திரபாபுவை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று நினைத்த பொழுது,” கவலை இல்லா மனிதன்” என்ற படம் உருவானது. சூட்டிங் ஸ்பாட்டிற்கு வரவேமாட்டாராம் சந்திரபாபு. இரண்டு மணிக்கு எழுவது அதன் பின் அவர் அங்கு வந்து சேர்வதற்குள் அந்த காட்சி அன்றைக்கு எடுக்க முடியாமலே போய்விடும். இதனால் மிகவும் மனம் நொந்த கண்ணதாசன் , நேரடியாக ஒருநாள் சந்திர பாபு வீட்டிற்கு சென்று இருக்கும் பொழுது, கண்ணதாசன் வந்திருக்கிறார் என்று சொல்லி, பின் வாசல் வழியே சந்திரபாபு எகிறி குதித்து வெளியே போயிருக்கிறார். அந்த மாதிரியான சம்பவங்கள் கூட நடந்து இருக்கிறது.
கடன் வாங்கி பண்ண படம் இப்படி ஆகிவிட்டது என்று மிகவும் வருத்தத்தில் இருந்தார் கண்ணதாசன்.
இந்த சமயத்தில் விஸ்வநாதன் வீட்டிற்கு ஒரு நாள் கண்ணதாசன் வந்து இருந்தார். அப்பொழுது அவர் அமர்ந்து கொண்டிருக்க, மாடி படிக்கட்டின் வழியே சந்திரபாபு வருவதை கண்டு எழுந்து வெளியே செல்ல முயற்சி செய்கிறார் கண்ணதாசன் .
உடனே சந்திரபாபு ” நில் கண்ணதாசா, நான் என் தவறை உணர்ந்து விட்டேன். முழு தவறும் என் பெயரில்தான் என்னை மன்னித்துவிடு. என் வாயால் என் வாழ்க்கைக்கு நானே குழி தோண்டி விட்டேன். நான் எதுவும் உன்னிடம் கேட்க மாட்டேன் .நான் இறந்து போனால் எனக்காக 2 வரிகள் கவிதை எழுது எனக்கு அது போதும் என்று சொல்லி புறப்பட்டு விட்டாராம்.