தன அமராவதி என்னும் திரைப்படத்தின் மூலம் 1947 ஆம் ஆண்டு தமிழ் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தவர் சந்திரபாபு. இவர் பின்னாளில் மிகப்பெரிய நகைச்சுவை நடிகராக வெற்றிக் கொடி கட்டி பறந்தார் என்றே கூறலாம்.
சினிமா துறையில் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் பலரும் பல விதங்களில் போராடி உள்ளனர். அவ்வாறாக சந்திரபாபு அவர்கள் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் சினிமா வாய்ப்பு கிடைக்க போராடிய சில நிகழ்வுகளை இந்த பதிவில் காண்போம்.
ஒரு நாள் ஜெமினி ஸ்டுடியோ கேண்டினில் அனைவரும் உணவருந்தி கொண்டிருந்த மதிய வேளையில் சந்திரபாபு அவர்கள் கேண்டினில் தண்ணீர் வாங்கி அதில் “மயில்துத்தம்” என்ற விஷயத்தினை கடந்து குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
அங்கு இருந்தவர்கள் பயந்து இவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் அதன் பின் காவல்துறையினரும் அங்கு வந்து இவரிடம் விசாரணை நடத்த, சந்திரபாபு அவர்கள் கூறியதாவது :-
நகைச்சுவை நடிகர் சந்திரபாபு அவர்கள் போலீசாரிடம், “சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி வந்தேன். அதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை” என்று கூறி தன்னுடைய சட்டை பையில் இருந்த கடிதத்தை எடுத்து ஜெமினி ஸ்டூடியோவின் அதிகாரி சுந்தரவர்த்தனிடம் கொடுத்திருக்கிறார். அவர் அதை படித்துவிட்டு பின்பு போலீசாரிடம் கொடுத்துவிட்டார்.
அந்த கடிதத்தில் சந்திரபாபு அவர்கள் சினிமாவில் நடிப்பதற்காக நான் இங்கு வந்தேன். ஆனால் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் அதனால் தான், இந்த முடிவை தான் எடுத்ததாகவும் என்னுடைய சாவிற்கு நானே காரணம் என்றும் எழுதி இருக்கிறார்.
மேலும் கடிதத்தில் இறந்த பின்பு என்னுடைய உடலை எனக்கு முதன்முதலில் வாய்ப்பளித்த மணிக்கொடி எழுத்தாளர் திரு பி எஸ் ராமையா அவர்களிடம் ஒப்படைத்து விடுமாறும் அக்கடிதத்தில் சந்திரபாபு எழுதியிருக்கிறார்.
இப்படி சினிமா துறையில் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் வாய்ப்பு கிடைக்காமல் தற்கொலை வரை சென்ற இவர் பின் நாட்களில் மிகப்பெரிய நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் படையை கொண்டவராக அக்காலத்திலேயே திகழ்ந்திருக்கிறார்.