மணிரத்தனமே என்றாலும் எனக்கு இதெல்லாம் பிடிக்காது.. கறாராக NO சொன்ன நடிகர்!!

0
112
The actor who refused to act in Mani Ratnam's direction .. which film? Do you know who he is?

காதல் காட்சி எடுப்பதில் வல்லவரான மணிரத்தினம் ஒரு சிறந்த இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் திகழ்ந்து வருகிறார். இயக்குனர் மணிரத்தினத்தின் படம் என்றாலே இருள் சூழ்ந்த காட்சிகளாக தான் இருக்கும்.

இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் சிறந்த படத்திற்காக இதுவரை ஏழு முறை தேசிய விருதினை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தன் படங்களுக்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் வல்லவர். தமிழ் சினிமாவில் இவருடைய படத்தில் நடித்த வாய்ப்பு கிடைக்காதா என இயங்கிய நடிகர் நடிகைகளும் உண்டு.

இந்நிலையில் மணிரத்தினம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் அதனை வேண்டாம் என நடிகர் “மைக் மோகன்” கூறியுள்ளார். ஏற்கனவே இவர் இயக்குனர் மணிரத்தினத்தின் படமான மௌன ராகம் மற்றும் இதயக் கோவில் போன்ற படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருக்கு அஞ்சலி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த பொழுதும் அதனை வேண்டாம் என கூறிவிட்டாராம்.

அஞ்சலி படத்தில் மோகன் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் மனநல பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை தனியறையில் வைத்து வளர்த்துவது போன்ற கதாபாத்திரமாகும். இது அவருக்கு பிடிக்காத நிலையில் தானாகவே இப்படத்தினை விட்டு விலகி விட்டார்.

மோகனுக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் ரகுவரன் நடிக்க ஒப்புக்கொண்டார். அஞ்சலி திரைப்படம் மெகா ஹிட் படமாக வெற்றியடைந்தது.