Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகரின் கையை கடித்த நடிகை..இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!

நடிகர் சங்கத் தேர்தலில் ஏற்பட்ட மோதலில் ஹீரோவின் கையை நடிகை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலுங்கு நடிகர் சங்கமான ‘மா’ (MAA) வுக்கு நேற்று நடிகர் சங்கத்தேர்தல் நடைபெற்றது. இதில் நடிகர் பிரகாஷ் தலைமையில் ஒரு அணியும், மோகன்பாபு மகன் மனோஜ் மன்சு தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டனர். தலைவர் பதவியை கைப்பற்ற பிரகாஷ்ராஜ் மற்றும் மனோஜ் மன்சு இருவரும் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை அறிவித்த பின்னர், இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி விமர்சனம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் நேற்று வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் நேற்று இரவே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், தலைவராக மனோஜ் மன்சு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் பிரகாஷ்ராஜ் அணியை சேர்ந்த அடையாளம் தெரியாத ஒருவர் வாக்குப்பதிவின் போது பிரச்சாரம் செய்துள்ளார். அதை, மனோஜ் மன்சு அணியை சேர்ந்த நடிகர் சிவ பாலாஜி எதிர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது பிரகாஷ் ராஜ் அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகை ஹேமா, நடிகர் சிவ பாலாஜியின் கையை திடீரென கடித்துள்ளார். இதை எதிர்பார்க்காத சிவ பாலாஜி அதிர்ச்சியடைந்தார். பின்னர் ஹேமா அங்கிருந்து சென்றுவிட்டார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து நடிகை ஹேமாவிடம் கேட்டபோது சிவ பாலாஜியை கடித்தது உண்மைதான். காரணமில்லாமல் யாரும் எதையும் செய்ய மாட்டார்கள் ஏன் கடித்தேன் என்பதை அவரிடமே கேளுங்கள் என்று கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து சிவபாலாஜி கூறும்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்கள் அணிக்கு பிரச்சாரம் செய்ததை எதிர்த்தேன். அப்போது என் பின்னால் நின்ற ஹேமா என் கையை திடீரெனக் கடித்தார். அவர் ஏன் கடித்தார் என்பது தெரியாது என்றார். நடிகை ஹேமா சிவ பாலாஜியின் கையை கடிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Exit mobile version