Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

லட்சுமி கடாட்சத்தை அள்ளித்தரும் அற்புதமான வேர்..!! வாழ்க்கையில் வெற்றியைக் காண இந்த ஒரு வேர் போதும்..!!

மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய வெட்டிவேரை பயன்படுத்தி உங்களது வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? வெட்டிவேர் என்றாலே வெற்றியை வாரி கொடுக்கக் கூடிய ஒரு வேர். பச்சைக் கற்பூரம், ஏலக்காய் இவைகளைப் போன்றே இயற்கையிலேயே மனம் படைத்த இந்த வேரும் லட்சுமி கடாட்சத்தை உருவாக்கக்கூடிய மற்றும் பணவரவை ஏற்படுத்தக் கூடிய ஒரு அற்புதமான வேராகும்.

இயற்கையில் இருந்து கிடைக்கக்கூடிய இந்த வேர், இலைகள், பூக்கள் இது போன்ற அனைத்திற்கும் தனித்துவம் என்பது உள்ளது. இந்த வெட்டிவேரை நமது வீடுகளில் மூன்று முறைகளில் பயன்படுத்தலாம். இந்த வெட்டிவேரை பயன்படுத்துவதன் மூலம் பணவரவை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வாய்ப்பை நமக்கு அமைத்துக் கொடுக்கும்.

ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி ஒரு எலுமிச்சம் பழம் மற்றும் சிறிதளவு வெட்டிவேரை போட்டு நமது வீட்டின் ஹால் மற்றும் தொழில் செய்யக்கூடிய இடங்களில் வைத்துக் கொள்ளலாம். உள்ளே நாம் வைத்திருக்கக்கூடிய எலுமிச்சம் பழம் மற்றும் வெட்டிவேர் வெளியில் பார்ப்பவர்களுக்கு நன்றாக தெரியும்படி இருக்க வேண்டும்.

இந்த வெட்டிவேர் மற்றும் எலுமிச்சம் பழம் தண்ணீரில் இருப்பதனால், இதனுடைய வாசனை காற்றின் மூலம் அனைத்து இடங்களுக்கும் பரவும். இதனால் கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் விலகும். இதனுடைய வாசனையானது நமக்கு மன அமைதியை கொடுத்து, நேர்மறை எண்ணங்களை நமக்குள் பரவச் செய்யும்.

தொழில் செய்யக்கூடிய இடத்தில் இதனை வைக்கும் பொழுது தொழிலில் நல்ல லாபம், பணவரவு, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் சக்தி ஆகியவை கிடைக்கும். மேலும் தொழிலில் உள்ள தடைகளையும், கண் திருஷ்டிகளையும் இது நீக்கி கொடுக்கும்.

இந்த தண்ணீரில் உள்ள எலுமிச்சம் பழத்தை வாரத்திற்கு ஒரு முறை மாற்றிக் கொள்ளலாம். வெட்டிவேரினை அதன் வாசனை உள்ளவரை, அதாவது ஒரு மாதம் வரையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை பயன்படுத்திய பிறகு கால் படாத இடத்தில் தான் இந்த வெட்டிவேரையும், எலுமிச்சம் பழத்தையும் போட வேண்டும்.

இரண்டாவதாக இந்த வெட்டிவேரை ஏதேனும் ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நமது வீடுகளில் உள்ள அனைத்து அறைகளிலும் வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக பூஜை அறை, குழந்தைகள் படிக்கக்கூடிய இடம் இதுபோன்ற இடங்களில் வைப்பதன் மூலம் நேர்மறை சக்திகள் உண்டாகும்.

இதனுடைய வாசனை மன அமைதி மற்றும் மன நிம்மதியை கொடுக்கும்.ஏதேனும் ஒரு செயலை செய்வதற்கு தடைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது என்கின்ற பொழுது, வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் விநாயகருக்கு இந்த வெட்டிவேரினை கொண்டு திரி செய்து தீபம் ஏற்றும் பொழுது அனைத்து தடைகளையும் நீக்கி காரிய வெற்றியை கொடுக்கும்.

மூன்றாவதாக இந்த வெட்டி வேரின் உள்ளே எலுமிச்சம் பழத்தை வைத்து ஒரு மஞ்சள் நிற நூலை வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். இதனை நமது வீட்டின் நிலை வாசலில் கட்டி வைப்பதன் மூலம் லட்சுமி கடாட்சம் உருவாகும் மற்றும் எதிர்மறை சக்திகள் நமது வீட்டின் உள்ளே நுழையாமல் தடுக்கப்படும்.

இதனை ஒரு மஞ்சள் நிற துணியைக் கொண்டு கட்டி, நிலை வாசலில் வைத்துக் கொள்ளலாம். இதன் மீது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து விடுவதன் மூலம் நல்ல வாசனை என்பது நீடித்து இருக்கும். மேலும் இதனை 48 நாட்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொள்ளலாம்.

Exit mobile version