ஹீரோவாக வந்து மாஸ் காட்டி விட்டு தப்பி சென்ற மிருகம்!.. நடுங்கி போன பொதுமக்கள்!..

0
183
The animal who came as a hero and left the mass and escaped!.. The public was shaken!..

ஹீரோவாக வந்து மாஸ் காட்டி விட்டு தப்பி சென்ற மிருகம்!.. நடுங்கி போன பொதுமக்கள்!..

திருச்சூர் மாவட்டம் முழங்குணந்துக்காவ் திரூரில் நகைக்கடை ஒன்று செயல் பட்டு வந்தது.இப்பகுதியில் தினமும் ஏராளமானோர் வந்து செல்வதுண்டு.திடிரென்று அங்கு ஒரு காட்டுப்பன்றி  சுற்றி திரிந்தது.கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த காட்டுப்பன்றி நகை கடைக்குள் புகுந்தது.

பின்னர் அங்குள்ள பொருட்களை எல்லாம் உடைத்து  சூரையாடிச் சென்றது.இதில் நகையிலுள்ள  கண்ணாடி உடைந்தது. திரூர் சர்ச் அருகேவுள்ள ஜோஸ் ஜூவல்லரியில் நேற்று இரவு காட்டுப்பன்றி ஒன்று புகுந்தது. காட்டுப்பன்றி ஒன்று கடைக்குள் புகுந்ததில் கண்ணாடி கதவு, கவுண்டர்களில் இருந்த கண்ணாடிகள் உடைந்தன.

கடை ஊழியர்கள் மற்றும் நகைக்கடைக்கு வெளியேயிருந்த அப்பகுதி மக்கள் சத்தம்  போட்டதையடுத்த நகைக்கடையில் இருந்து வெளியேறியது அந்த  காட்டுப்பன்றி.மேலும் திருச்சூர் ,ஷொர்னூர் மாநில நெடுஞ்சாலையில் அங்கும் இங்கும் ஓடியதால், அவ்வழியாக சென்றவர்கள் பீதியடைந்தனர்.

நகைக்கடை மூடும் நேரத்தில் இந்த காட்டுப்பன்றி பல வித்தைகளை நடத்தி சென்றது.தங்க ஆபரணங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி கூண்டுகளை காட்டுப்பன்றி பலமாக முட்டியது. ஆனால் அவை உடைக்க முடியவில்லை. கடையிலிருந்த நாற்காலிகள் மற்றும் இதர பொருட்களை காட்டுப்பன்றி உடைத்து நொறுக்கியது.

திரூர் அருகே பூமலை வனப்பகுதியில் இருந்து காட்டுப்பன்றி வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இது தொடர்பாக கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.அவ்வூர் மக்கள் விரைவில் இந்த காட்டு பன்றியை காட்டுக்குள்  விரட்டுமாறு  கோரிக்கை விடுத்துள்ளனர்.