அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு! மருத்துவ படிப்பில் கூடுதலகா இட ஒதுக்கீடு!
கடந்த 17ஆம் தேதி சென்னையில் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ படிப்பில் நடப்பாண்டின் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.அப்போது அவர் கூறுகையில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேரடியாகவோ மற்றும் பொதுக் கலந்தாய்வு இணையவழியாகவும் நடைபெற உள்ளது.அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள இடங்கள் ,தனியார் கல்லூரிகளில் மாநில அரசு இடங்கள் என மொத்தம் 6067 எம்.பி.பி.எஸ்.இடங்கள் உள்ளன.
மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்காக 1380 பிடிஸ் இடங்கள் உள்ளன. இதுமட்டுமின்றி தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,310 எம்.பி.பி.எஸ் இடங்கள் 740 பி.டி.எஸ் இடங்கள் உள்ளன.தற்போது இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த 19ஆம் தேதி தொடங்கியது.மேலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில் இதுவரை இல்லாத அளவில் நடப்பாண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து சிஎம்சி மருத்துவ கல்லூரியில் 50 இடங்கள் ,தனலட்சுமி, வெங்கடேஸ்வராவில் தலா 75 அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் 565 மாணவர்கள் சேர உள்ளனர்.7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் 565 மாணவர்களின் படிப்பு கட்டணத்தை அரசே ஏற்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பில் கூடுதலாக 200 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 10,825ஆக அதிகரித்துள்ளது.மேலும் மருத்துவ படிப்புக்கான பாடநூல்கள் அடங்கிய மடிக்கணினிகளை மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.