டாடா குழுமம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த இரண்டு விமான நிறுவனங்களும் இணைக்கப்பட்டுள்ளது!
டாடா குழுமம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .அந்த அறிவிப்பில் விஸ்தாராவில் டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு 51 சதவீத பங்கும் ,சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 49 சதவீத பங்கும் உள்ளது.அதனால் தற்போது டாடா குழுமத்தின் ஏர் இந்தியாவுடன் விஸ்தாராவை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக ஒப்பந்தம் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பூர்த்தி செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த இணைப்பு மூலம் 218 விமானங்களுடன் நாட்டின் பெரிய சர்வதேச விமான நிறுவனம் மற்றும் இரண்டாவது உள்நாட்டு விமான நிறுவனம் என பெயரை ஏர் இந்தியா பெரும் என டாடா குழுமம் நேற்று தெரிவித்தது.
இதனை தொடர்ந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறுகையில் இரு விமான நிறுவனங்கள் இணைப்பையொட்டி ஏர் இந்தியாவில் ரூ 2,058 கோடியை எஸ்ஐஏ முதலீடு செய்யும்.இதன் மூலம் ஏர் இந்தியாவில் எஸ்ஐஏ 25.1 சதவீத பங்குகளை வைத்திருக்கும் என தெரிவித்தனர்.
மேலும் டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர்ரஷியா, இந்தியா, விஸ்தாரா ஆகிய நான்கு விமான நிறுவனங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது