மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் பயணிகள்!
முதல் முதலில் சீனாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பானது உலக நாடுகள் முழுவதும் பரவி கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.
மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் அப்போது போக்குவரத்து சேவைகளும் அனைத்து பகுதிகளுக்கும் நிறுத்தப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. அதுமட்டுமின்றி தேர்வுகள் பொது தேர்வுகள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
மேலும் தொழில் நிறுவனங்கள் முடங்கிய காரணத்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் புதிய வகை கொரோனா பரவல் மீண்டும் எழுச்சி பெற தொடங்கியது. அதனால் சர்வேச விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது.அதனை தொடர்ந்து சீனா, சிங்கப்பூர், ஹாங்காங் ,கொரியா, ஜப்பான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.