மின்வாரியத் துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு! கோடை காலத்தில் அதிக மின் தேவைக்கு ஏற்பாடு!

0
200
The announcement made by the Minister of Electricity V Senthil Balaji! Provision for high electricity demand during summer!

மின்வாரியத் துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு! கோடை காலத்தில் அதிக மின் தேவைக்கு ஏற்பாடு!

மின்சாரத்துறை செயல்பாடுகள் குறித்து சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வி செந்தில் பாலாஜி கூறுகையில் நடப்பாண்டில் தமிழ்நாட்டின் அதிகபட்ச மின் நுகர்வு  கடந்த 4ஆம்  தேதி 17 ஆயிரத்து 584 மெகா வாட்டாக பதிவாகியுள்ளது. இந்த அளவு கடந்த ஆண்டில் பதிவாக அதிகபட்சம் அளவைவிட 21 மெகாவாட் கூடுதலாகும்.

மேலும் வரும் நாட்களில் மின் நுகர்வு  அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டின் தற்போதைய மாதம் மின் தேவை 16 ஆயிரத்து 500 மெகாவாட்டில் இருந்து 17500 மெகாவாட் வரை. அடுத்து மே மாதத்தில் 17 ஆயிரத்து 400 மெகா வாட்டாக அதிகரிக்க வரும்  கோடை வெப்பத்தின் தாக்கம் இருப்பதினால் உச்சபட்ச மின் தேவை 18,500 மெகா வாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனை பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மாநிலத்தில் உள்ள அனல்,புனல் மின் நிலையங்கள், மத்திய, மாநில தொகுப்புகளின் மூலம் 8,959 மெகாவட்டும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் வழியாக 4750 மெகா வாட்டும்  நீண்ட மற்றும் நடுத்தர கால கொள்முதல் ஒப்பந்தங்கள் வழியாக தினசரி 2 ஆயிரத்து 752 மெகாவாட்டும் கிடைக்க நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் மின் பரிமாற்ற முறையின் கீழ்  வெளி மாநிலங்களுக்கு கொடுத்ததன் அடிப்படையில் 650 மெகா வாட் கிடைக்கும் உள்ளது மூலம் 1562 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. மேலும் கொள்முதல் மின்சாரம் யூனிட்டுக்கு எட்டு புள்ளி 50 என்ற விலையில் வாங்கப்படுவதனால் கடந்த காலத்தை விட தற்போது ரூ.12 கோடி சேமிப்பு கிடைத்துள்ளது.மின்சாரத்தை தடையின்றி உற்பத்தி செய்ய வசதியாக இருக்க அனல் மின் நிலையங்களில் இருப்பு குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

ஐந்து அனல் மின் நிலையங்களிலும் 799 மெட்ரிக் டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளது. இவற்றை வைத்து 11 நாட்களுக்கு பயன்படுத்தலாம். கடந்த ஆண்டு காட்டிலும் கூடுதலான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு ஏதுவாக 12 பெரிய கப்பல்கள் மூலம் நிலக்கரியை கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் வி செந்தில் பாலாஜி கூறியுள்ளார். மேலும் அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, நிர்வாக இயக்குனர் ஆர் மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.