Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ராமர் கோவில் அறகட்டளை கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பு! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு!

ராமர் கோவில் அறகட்டளை கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பு! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு!

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை அந்த கோவிலுக்கென அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை செயல்படுத்தி வருகின்றது.மேலும் இது தொடர்பாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேஷத்ரா அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் கூறியதாவது அறகட்டளை சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ராமஜென்ம பூமி வளாத்தில் மகத்தான மனிதர்கள் துறவிகளின் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப நிபுணர்கள் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் ரூ 1800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்படும்.மேலும் அறக்கட்டளை  கூட்டத்தில் அறக்கட்டளை தொடர்பான விதிமுறைகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டுள்ளது.ராம ஜென்மபூமி வளாகத்தில் பிராமண்டமாக அமைக்கப்படவுள்ள கோவிலின் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டுமான பணிகள் முடிந்து 2024 ஜனவரி மாதத்திற்குள் கோவிலில் ராமர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் என கூறினார்.

Exit mobile version