Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விநாயகர் சதுர்த்தி கொண்டாட தொடரப்பட்ட வழக்கிற்கு உயர்நீதிமன்றம் அளித்த பதில்:?

விநாயகர் சதுர்த்தி கொண்டாட தொடரப்பட்ட வழக்கிற்கு உயர்நீதிமன்றம் அளித்த பதில் 😕

தமிழகத்தை பொருத்தவரையில் வருடம் வருடம் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படும்.விநாயகர் சதுர்த்தி என்றாலே ஒரு வாரத்திற்க்கு முன்பிலிருந்தே,விநாயகர் சிலையை வாங்க ஆரம்பித்து விடுவர்.மேலும் விநாயகர் சதுர்த்தியிலிருந்து,3,5,7நாட்கள் என பூஜை செய்து பின்பு பவானி ஆறு,காவிரி ஆறு,போன்ற சிறப்புமிக்க நீர்நிலைகளில் கரைத்துவிட்டு வருவது வழக்கம். ஆனால் தற்போது இந்த வருடம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வரும் நிலையில், கொரோனா பரவுதலை கருத்தில்கொண்டு தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதத்திலிருந்தே கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசால் அனைத்து மதம் சார்ந்த விழாகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது.தற்போது ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரப்போகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவிற்கும் அரசு தடை விதித்துள்ளது.இது குறித்து ஒரு செய்தி தொகுப்பினை அரசு வெளியிட்டுள்ளது அவற்றில் கூறியதாவது:

கொரோனா எதிரொலியால் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழி படுவோ, ஊர்வலமாக செல்லவோ, நீர்நிலைகளில் கரைக்கவோ, அனுமதி இல்லை என தமிழக அரசு  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதனைதொடர்ந்து தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட மக்கள் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கு மீதான விசாரணையின் போது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனாவால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலமாக செல்ல  எப்படி அனுமதிக்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசு தடை விதித்ததை சரி என்றும் விநாயகர் சதுர்த்தி நடத்த உத்தரவிட்ட  கோரிய மனுவை திரும்ப பெறாவிட்டால், அம்மனுக்கு அபராதம் விதிக்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Exit mobile version