Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொடங்கிய 5 நாட்களில் புதிய சாதனை படைத்த செயலி!!  மகிழ்ச்சியில் மெட்டா நிறுவனம்!!

The app set a new record in 5 days of launch!! Meta Company in Joy!!

The app set a new record in 5 days of launch!! Meta Company in Joy!!

தொடங்கிய 5 நாட்களில் புதிய சாதனை படைத்த  செயலி!!  மகிழ்ச்சியில் மெட்டா நிறுவனம்!!

த்ரெட்ஸ் என்ற செயலியை ஜூலை 6  மெட்டா ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த செயலி வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலையதளங்களின் நிறுவனமான மெட்டா  த்ரெட்ஸ்வை அறிமுகபடுத்தியது நல்ல வரவேற்பை பெற்றது. அந்த செயலி ட்விட்டருக்கு போட்டியாக உருவாக்கப்பட்டது என்று இணையத்தில் செய்தி பரவி வந்தது.

அதனையடுத்து மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் அறிமுகபடுத்திய 4 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் அதில் இணைந்துள்ளார்கள் என்ற தகவலும் வந்தது. மேலும் இந்த செயலி மூலம் ட்விட்டர் போல தங்களின் கருத்துகளை பதிவு செய்யவும் மற்றும் பிற கணக்குகளை பின்தொடரவும் முடியும் என்றும், ஒரு கருத்தில் 500 வார்த்தைகளை பதிவிட முடியும் என்றும், ட்விட்டரை விட அதிக வசதிகள் இதில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை பற்றிய தகவலை மெட்டா சொந்த இன்ஸ்டகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. மேலும் இந்த செயலி மூலம்  அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடியுபர் ஜிம்மி டெனால்ட்சன் செயலியில் 10 மில்லியன் பின்தொடர்ந்து கின்னஸ் சாதனை  படைத்திருந்தார். அதனை தொடர்ந்து 5 நாட்களில் த்ரெட்ஸ் 10 கோடி பயனர்களை கொண்டு சமூக வலைத்தங்களில் முந்தியுள்ளது.

மேலும் இந்த செயலியை  இன்ஸ்டாகிராம் மூலம் எளிதாக கணக்கு தொடங்கலாம் என்பதால் சீக்கிரமாக மக்கள் இடையே பிரபலமாகியுள்ளது. சாட்ஜிபிடி, இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற செயலிகள் அறிமுகமாகி 10 கோடி பயனர்களுக்கு இரண்டு மாதம் மற்றும் 9 மாதம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version