Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமேசான் குடோனில் ஆட்டைய போட்ட ஆசாமிகள்! பரபரப்பு சம்பவம்!

The assailants put sheep in the Amazon cotton! Sensational incident!

The assailants put sheep in the Amazon cotton! Sensational incident!

அமேசான் குடோனில் ஆட்டைய போட்ட ஆசாமிகள்! பரபரப்பு சம்பவம்!

இப்போது உள்ள காலக்கட்டத்தில் ஒரு ரூபாய் முதல் ஒரு லட்சம் வரையிலும் பொருட்கள் அனைத்தையும் வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் ஆடர் செய்து வாங்கி கொள்கின்றனர்.அதற்காக எண்ணற்ற செயலிகள் உள்ளது அதில் மிக புகழ் பெற்ற செயலி என்றால் அவை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் என கூறலாம்.அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் புது கோவிந்தாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமேசான் ஆன்லைன் நிறுவனத்தின் பொருட்கள் வைத்திருக்கும் குடோன் உள்ளது.

அங்கு அந்த நிறுவனத்தின் மூலமாக ஆர்டர் செய்யும் பொருட்கள் அனைத்தையும் அங்கு தான் பாதுகாக்க படுகின்றது.அந்த குடோன் அருகில் ரயில்வே தண்டவாளம் செல்கின்றது.இந்நிலையில் நேற்று வழக்கம் போல் ஊழியர்கள் குடோனை பூட்டி சென்றுள்ளனர்.அதனையடுத்து நேற்று இரவு மர்ம நபர்கள் குடோனின் சுவற்றில் கடப்பாரை மற்றும் கம்பியால் துளையிட்டுள்ளனர்.

அதனையடுத்து குடோனுக்குள் புகுந்து அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு வந்த ஊழியர்கள் சுவரில் துளையிட்டு கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து ஆம்பூர் டவுன் போலீசார்க்கு தகவல் தெரிவித்தனர்.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு உள்ள கைரேகைகளை சேகரித்தனர்.மேலும் குடோனில் இருந்த கண்காணிப்பு கேமாரக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version