Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சட்டசபை தேர்தலுக்கு மும்முறமாக தயாராகும்! மக்கள் நீதி மையம்!

சட்டசபைத் தேர்தலுக்கு தயாராவது பற்றி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை செய்து வருகின்றார். மக்கள் நீதி மையத்தின் தலைவர் திரு கமலஹாசன் அவர்கள்.

சென்னை டிநகரில் ஜிஆர்டி சொகுசு விடுதியில் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மையத்தின் மாவட்டச் செயலாளர்கள் உடனான கூட்டம் நடைபெற்று வருகின்றது. இன்று சுமார் 100 தொகுதிகளுக்கு உட்பட்ட நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நீலகிரி, கோவை, கடலூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, ஆகிய மாவட்டங்களின் பிரதிநிதிகள், பங்கேற்று இருக்கிறார்கள்.

இக்கூட்டத்தில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் திரு கமலஹாசன் அவர்கள் அந்தக் கட்சியின் வளர்ச்சி பற்றி கேட்டறிந்தார்.

தேர்தலில் தனித்து போட்டியா அல்லது கூட்டணியுடன் இணைந்து போட்டியிட என்று கேட்டதற்கு திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அவர் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

திரு கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் பரப்புரையில் ஈடுபட இருக்கும் வாகனம் தயார் நிலையில் இருக்கின்றது.

Exit mobile version