Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரயிலில் பையில் இருந்த பச்சிளம் குழந்தை! தாயின் இரக்கமற்ற செயல்!

The baby in the bag on the train! Ruthless action of the mother!

The baby in the bag on the train! Ruthless action of the mother!

ரயிலில் பையில் இருந்த பச்சிளம் குழந்தை! தாயின் இரக்கமற்ற செயல்!

சென்னை கடற்கறையில் இருந்து செங்கல்பட்டு மின்சார ரயில் வந்தது.அந்த ரயிலானது நான்காவது நடைமேடையில் நின்றது அப்போது அந்த ரயிலில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர்.அப்போது பெண்கள் பயணம் செய்யும் ரயிலில் ஒரு கட்டைப்பை மட்டும் தனியாக இருந்தது.அதனை ஒருவரும் கண்டுக்கொள்ள வில்லை. சிறிது நேரத்தில் அந்த பையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.அதனை கேட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பயணிகள் சென்று பார்த்தபோது பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருந்தது. மேலும் இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார்க்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பையில் இருந்த குழந்தையை மீட்டு விசாரணை நடத்தினார்கள்.அந்த விசாரணையில் குழந்தையின் தாய் யார் என்று தெரியாததால் மேலும் விசாரணை நடத்தினார்கள்.பெண்குழந்தை என்பதால் அவர் விட்டுச் சென்றுள்ளனரா இல்லை குழந்தையை கடத்தி வந்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.குழந்தை இருந்த கட்டைப்பையுடன் வந்த பெண் பயணி குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில் மின்சார ரயிலில் பச்சிளங்குழந்தை மீட்கப்பட்டது குறித்து செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் குழந்தையை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல பிரிவில் அனுமதித்தனர்.

குழந்தை பிறந்து பத்து நாட்களே இருக்கும் என்பதால் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.மேலும் அந்த குழந்தை நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version