Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிறந்த சில மணி நேரங்களே ஆன குழந்தை! பாவிகள் செய்த கொடுஞ்செயல்!

பிறந்த சில மணி நேரங்களே ஆன குழந்தை! பாவிகள் செய்த கொடுஞ்செயல்!

ஆந்திர மாநிலத்தில் பிறந்த ஒரு சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையை உயிருடன் புதைத்து விட்டு போன சம்பவம் அங்குள்ள மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், யெட்டபாக்க கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் நேற்று பிறந்த ஒரு சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையை உயிருடன் புதைத்து கொண்டிருந்தனர். அப்பொழுது ஆடு மேய்க்க அந்தப் பக்கம் வந்த நபர்களைப் பார்த்து அந்த மர்ம நபர்கள் குழந்தையை அங்கேயே விட்டு ஓடிச் சென்றனர்.

அங்கு வந்து பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பிறந்த சில மணி நேரம் ஆன‌ ஆண் குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்டு ஒடிசென்றுள்ளனர்.

பின் அந்த ஆடு மேய்ப்பர்கள் குழந்தையை உயிருடன் மீட்டு உள்ளனர். கள்ளக்காதல், வீட்டிற்கு தெரியாமல் இருந்த உறவு போன்ற காரணங்களால் குழந்தை பிறந்த நிலையில், அதனை கைவிடுவதற்காக குழந்தையின் தாய் மற்றும் உறவினர்கள் இந்த படுபாதக செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு யெட்டபாக்க போலீசார் வழக்குப் பதிவு செய்து குழந்தையை உயிருடன் புதைத்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

Exit mobile version