DMK: திருவள்ளுவர் ஓவியத்தில் காவி நிறம் இருந்ததையொட்டி அதனை நீக்கியது குறித்து இந்து மாநில அமைப்பு தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டமானது நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த வெள்ளி விழாவை முன்னிட்டு மாணவர் மற்றும் மாணவிகளுக்கு பலவித போட்டிகள் வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாணவர் ஒருவர் திருவள்ளுவர் உருவத்திற்கு காவி நிற வேஷ்டி அணிந்த படி வரைந்திருந்தார். இதனை உடனடியாக அகற்றும் படி அங்குள்ள நிர்வாகிகளிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இது போல திருவுருவம் இருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பும் இப்படித்தான் அறநிலையத்துறை அமைச்சர் அலங்கார தொட்டியில் தாமரை கூட இருக்க கூடாது என கூறினார். இவர்களின் அதிகாரத்தை இப்படி பல இடங்களில் துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர்.அந்த வகையில் மாணவர் வரைந்த ஓவியத்தில் இவர்களின் திராவிட கொள்கையை திணிப்பதென்பது மிகவும் அநியாயமான ஒன்று. அந்த மாணவர் தன்னுடைய கற்பனைத்திறனை வெளிப்படும் நோக்கத்தோடு வரைந்தததை நீக்கியது கண்டனத்திற்குரிய ஒன்று என பலரும் கூறி வருகின்றனர்.
கருத்து சுதந்திரம் பேசும் இவர்களே இப்படி செய்யலாமா என கேள்வி எழுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார், குறிப்பாக அதில் ஓவியத்திலேயே காவி இருக்க கூடாது எனக் கூறுபவர், பல கோவில்களை திருவள்ளுவரை வழிபாடு செய்து வருகின்றனர்.
அப்படி பார்க்கையில் அந்த கோவில்களை அகற்ற சொல்வாரோ என கேள்வி எழுப்பியுள்ளார்.இவரைப்போல பலரும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்ததற்கு தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.