Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இவர்களுக்கு வங்கி கொடுத்த சூப்பர் ஆப்பர்!! ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் உடனடி லோன்!!

இவர்களுக்கு வங்கி கொடுத்த சூப்பர் ஆப்பர்!! ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் உடனடி லோன்!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்காக பல நலத்திட்டங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய அரசாங்கம் பி எம் கிசான் என்ற திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தவணை முறையில் மானியம் வழங்கி வருகிறது.

அந்த வரிசையில் தற்பொழுது வங்கிகளும் விவசாயிகளுக்கு கடன் கொடுக்க முன்வந்துள்ளனர். தற்பொழுது பஞ்சாப் நேஷனல் வங்கி ஆனது புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. விவசாயிகள் விதை உரம் போன்றவற்றை வாங்குவதற்கு லோன் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

அந்த வகையில் இந்த கடனை பெறுவதற்கு கிசான் மானியம் வாங்குபவர்களும் அதன் கிரெடிட் கார்டை வைத்து இந்த லோனை பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது.

இந்த வங்கியில் விவசாயிகள் கடன் வாங்க நினைப்பவர்கள் கீழ்கண்டவற்றை பின்பற்றி வாங்கிக் கொள்ளலாம்.

முதலாவதாக 56070 என்ற எண்ணுக்கு உங்களது செல்போனில் இருந்து LOAN இன்று குறுஞ்செய்தி அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்

அவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பத் தெரியாதவர்கள் 18001805555

என்ற எண்ணுக்கும் உடனடியாக மிஸ்டு கால் கொடுத்து இந்த கடனை பெறுவதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் நீங்கள் நேரடியாக வங்கிக்கு சென்றோம் இது குறித்து தகவலை கேட்டறிந்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Exit mobile version