Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மருத்துவரை தாக்கிய காட்டுமிராண்டிகள்! கண்டனம் தெரிவித்த மருத்துவர் சங்கம்!

The barbarians who attacked the doctor! Condemned Medical Association!

The barbarians who attacked the doctor! Condemned Medical Association!

மருத்துவரை தாக்கிய காட்டுமிராண்டிகள்! கண்டனம் தெரிவித்த மருத்துவர் சங்கம்!

கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை மையத்தில் உயிரிழந்ததால் நோயாளியின் உறவினர்கள் 24 பேர் மருத்துவரையும், மருத்துவ உதவியாளர்களையும், சரமாரியாக தாக்கி உள்ளனர்.

அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் கொரோனா நோயாளியை பரிசோதித்த பின்னர் கொரோனோ வார்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளி கியாசுதீனின் மரணத்திற்கு மருத்துவர் மற்றும் அவரது மருத்துவ குழுவினர் அலட்சியம் காட்டியதாக தாக்குதல் நடத்தியவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

ஆனால் மருத்துவர் தரப்பில் நோயாளி உடல்நிலை மோசமாக இருப்பதாக உறவினர்கள் என்னிடம் சொன்னார்கள், பிறகு நான் அவரது உடல்நிலையை பரிசோதித்த மூன்று மணி நேரத்தில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் சேனாபதி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவருடைய உறவினர்கள், அங்கிருந்த மருத்துவர் சியுஜ் குமார் சேனாபதியை கடுமையாக தாக்கினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். இந்த தாக்குதலில் அங்கு பணி புரியும் ஒரு பெண் உட்பட மேலும் இருவர் காயமடைந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த விவகாரம் குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் ஜே.ஏ.ஜெயலால் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது தங்கள் உயிரை கூட பொருட்படுத்தாமல் மக்களுக்காக ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் உழைத்து வருகின்றனர். தங்கள் குடும்பத்தையும் மறந்து இரவு பகலாக நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.மேலும் அவர்கள் மிகவும் மன உளைச்சலில் உள்ளபோதும் நோயாளிகளை கவனித்து வருகின்றனர்.

மேலும் கொரோனா முன்களப்பணியாளர்களில் முதன்மையானவர்களாக விளங்கும் மருத்துவர்கள் மீது நாட்டின் பல்வேறுபகுதிகளில் தாக்குதல் நடத்தப்படுவது வேதனையளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்களால் மருத்துவர்கள் அச்சத்திலும், கவலையிலும் உள்ளதாக கூறியுள்ளார். மருத்துவர் மீது நோயாளிகளின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியதை ஒருபோதும் ஏற்க முடியாது.

Exit mobile version