Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கிராம மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது 

கிராம மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் கிராம மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் களக்காடு கோட்டத்திற்கு உட்பட்ட புலவன் குடியிருப்பு பகுதியில் கடந்த ஒரு வாரம் காலமாக கிராம மக்களுக்கு கரடி ஒன்று தொல்லை கொடுத்து வந்தது.

இந்த கரடியை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பாக துணை இயக்குநர் மற்றும் வன உயிரின காப்பாளர் ரமேஸ்வரன் உத்தரவின்படி புலவன் குடியிருப்பு கிராமத்தில் கூண்டு வைக்கப்பட்டது.

அந்த கூண்டில் இன்று காலையில் கரடி பிடிப்பட்டது. தற்போது வனச்சரக அலுவலர் செல்வ சிவா தலைமையிலான வன பணியாளர்கள் குழுவுடன் கரடியை களக்காடு வனப்பகுதிக்குள் விடுவிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Exit mobile version