Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் கருங்கோழி கறி;!விலை எவ்வளவு தெரியுமா?

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கருங்கோழி கறிக்கு தற்போது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இதனால் ஆட்டு கறியை போலவே கருங்கோழி கறியும் ஒரு கிலோ ரூபாய் 1000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா உள்ளிட்ட வைரஸ் நோய்கள் வரமால் தடுக்க நம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டால் எந்த பயமும் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

தற்போது கொரோனா வைரஸ் பீதியில் இதுவரை நொறுக்குத் தீனி, பாஸ்ட் புட், கூல்ட்ரிங்க்ஸ் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு வந்த நகர வாசிகள்
தங்களது சாப்பாட்டு முறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். மக்கள் அனைவரும் தற்போது காய்கறி, பழங்கள், பழச்சாறு உள்ளிட்டவற்றை அதிகம் சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செயலில் ஈடுபட்டு உள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல உணவு வகைகள் மருத்துவ நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டு வந்தது.
அந்த வரிசையில்,மத்தியபிரதேச மாநில காடுகளில் வளரும் “கடக்நாத்” என்னும் வகை கருங்கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதாக வாட்ஸ்அப் போன்ற பொது ஊடகங்களில் செய்திகள் பரவவே தற்போது இந்த கருங்கோழிகளின் விலை எகிறி உள்ளது.

இந்த கருங்கோழிகளை சேலம் மாவட்டம் ஓமலூரில் பண்ணை அமைத்து வளர்க்கப்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக இந்த கோழிகளுக்கு, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால்,கடந்த மாதம் கிலோ ரூபாய் 450 க்கு விற்கப்பட்ட கருங்கோழி கறியின் விலை ஒரே மாதத்தில் விலை சரசரவென ஏறி கருங்கோழி கறி கிலோ ரூபாய் 1000க்கும் அதனுடைய முட்டை ரூபாய் 25 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Exit mobile version