Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த மூன்று பொருட்களை மட்டும் உறங்கும் பொழுது வைத்து தூங்கினால் ஏற்படும் நன்மைகள்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!

இந்த மூன்று பொருட்களை மட்டும் உறங்கும் பொழுது வைத்து தூங்கினால் ஏற்படும் நன்மைகள்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!

 

உறங்கும் பொழுது நம் நம் தலைக்கு கீழ் வைத்து படுத்தால் என்ன பலன் என்பதை காணலாம். அதிக அளவு கண் திருஷ்டி மேல் இருக்கின்றது என்பவர்கள் அதிக அளவு நோய் ஏற்படுகிறது என்பவர்கள் மற்றும் அமானுஷ்ய கனவு வருபவர்கள் அனைவரும் உறங்கும் பொழுது தலைக்கு கீழ் புள்ளி இல்லாத  சுத்தமான எலுமிச்சை பழத்தை வைத்து உறங்க வேண்டும். மூன்று நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் அதன் பிறகு அந்த எலுமிச்சம் பழத்தை செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்று அருகில் உள்ள அம்மன் கோவில் சூலத்தில் குத்த வேண்டும்.

அதிகளவு கண் திருஷ்டி மற்றும் காரிய தடைகள் இருப்பவர்கள் அதன் பிறகு சிகப்பு அல்லது மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு வைத்து நன்றாக முடிந்து கொள்ள வேண்டும். ஏழு நாட்கள் தொடர்ந்து அதனை தலையணையின் அடியில் வைத்து உறங்க வேண்டும். ஏழாவது நாளன்று அந்த உப்பை எடுத்து தண்ணீரில் கரைக்க வேண்டும்.

 

இதனை அடுத்து நல்ல பெயர் ,புகழ் ,சமுதாயத்தில் அந்தஸ்து உயர வேண்டும் என்றால் சிறிய சந்தன கட்டையை தலையணையின் அடியில் வைத்து உறங்க வேண்டும். அதன் பிறகு வெள்ளி நாணயத்தை வைத்து உறங்கலாம். காலையில் எழுந்தவுடன் அந்த நாணயத்தை பார்க்க வேண்டும். தொடர்ந்து ஒரு மாதத்திற்கு அதனை செய்து வந்தால் பொருளாதாரத்தில் நன்கு வளர்ச்சி ஏற்படும்.

Exit mobile version