Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடேங்கப்பா.. மூத்த குடிமக்களுக்கு இந்திய அரசு வழங்கும் சலுகைகள் இவ்வளவா!! கட்டாயம் மிஸ் பண்ணிடாதீங்க!!

The benefits provided by the Indian government to senior citizens are so much!! Don't miss it!!

The benefits provided by the Indian government to senior citizens are so much!! Don't miss it!!

அடேங்கப்பா.. மூத்த குடிமக்களுக்கு இந்திய அரசு வழங்கும் சலுகைகள் இவ்வளவா!! கட்டாயம் மிஸ் பண்ணிடாதீங்க!!

நமது இந்தியாவில் இருக்கின்ற மூத்த குடிமக்களின் நலனிற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல பயனுள்ள சலுகைகளை வழங்கி வருகின்றது.நமது இளமை காலத்தில் ஓடி ஓடி உழைத்து எதிர்காலத்திற்காக சேமித்து வந்தால் முதுமை காலத்தில் பிறரை சாராமல் வாழலாம்.ஆனால் குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு பிறரை சார்ந்து வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மூத்த குடிகள் பிறரை சார்ந்து வாழாமல் இருக்க மத்திய மற்றும் மாநில அரசு பல திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கிவருகிறது.அஞ்சல் மற்றும் வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கு என்று பல நல்ல சேமித்து திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது.

அறுபது வயதை கடந்தவர்களுக்கு போஸ்ட் ஆபிஸில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் நடைமுறையில் உள்ளது.இது அதிக வட்டி தரக் கூடிய அசத்தல் சேமிப்பு திட்டமாகும்.FD,சேமிப்பு கணக்கு உள்ளிட்டவைகளில் மற்றவர்களை காட்டிலும் மூத்த குடிகளுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது.இதனால் மூத்த குடிமக்களால் குறுகிய காலத்தில் அதிக வருமானம் ஈட்ட முடியும்.

அதேபோல் நமது இந்திய அரசாங்கம் 60 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு வரி செல்லுவதில் இருந்து விலக்களித்துள்ளது.இதனால் தாங்கள் ஈட்ட கூடிய வருமானத்திற்கு வரி கட்ட வேண்டிய அவசியம் மூத்த குடிமக்களுக்கு இருக்காது.

மேலும் மூத்த குடிமக்களுக்கு அரசு செயல்படுத்தி வருகின்ற ஓய்வூதிய திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாக திகழ்கிறது.18 வயதை பூர்த்தியடைந்த இந்திய குடிமகன்கள் எவரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்து பலன் பெறலாம்.

மூத்த குடிமக்களால் வங்கிகளுக்கு சென்று தங்களுக்கான சேவைகளை பெறுவது கடினமாக இருப்பதால் ரிசர்வ் வங்கியானது அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் வங்கிகள் முதிய வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று சேவைகளை வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறது.அதன்படி மூத்த குடிமக்களுக்கு பணம் பெறல்,பணப் பரிவர்த்தனை,சலான் நிரப்புதல்,KYC நிரப்புதல் போன்ற சேவைகளை வங்கிகள் வழங்கி வருகின்றது.

மூத்த குடிமக்களுக்கு உடல்நலக் கோளாறு ஏற்படுவது பொதுவானது.இதனால் இந்திய குடியுரிமை பெற்ற மூத்த குடிமக்களுக்கு சுகாதார காப்பீடு மூலம் இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.

பெண்களுக்கு மாநகர பேருந்தில் பயணிக்க இலவசம் என்பது போல் மூத்த குடிமக்களுக்கும் போக்குவரத்தில் பயணிக்க கட்டண சலுகைகள் வழங்கப்பட்டுகிறது.

Exit mobile version