Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பச்சையாக இருந்தாலும் பல பிரச்சனைகளை எளிதில் மாற்றக்கூடிய சிறந்த மூலிகை அருகம்புல் ஜூஸ்!!

பச்சையாக இருந்தாலும் பல பிரச்சனைகளை எளிதில் மாற்றக்கூடிய சிறந்த மூலிகை அருகம்புல் ஜூஸ்!!

அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக்கொண்டு இரண்டையும் கலந்து உடல் முழுவதும் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பின்னர் கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அருகம்புல் சாற்றை எடுத்து சிறிதளவு மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் பஞ்சு போல் மாறிவிடும்.

அருகம்புல்லை சிறிதளவு நீரை விட்டு காய்ச்சி அந்த நீரை பதமான சூட்டில் குடித்து வந்தால் இதய நோய்க்கு இதமளிக்கும். அருகம்புல்லை சிறிதளவு தயிர்விட்டு அரைத்து குடித்துவந்தால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் குணமாகும். திடீரென ஏற்படும் வெட்டு காயங்களுக்கு அரிவாள் மூக்கு என்று சொல்லப்படும் பச்சிலையையும், அருகம்புல்லையும் சம அளவாக எடுத்து அரைத்து காயம்பட்ட இடங்களில் கட்டினால் உதிரப்போக்கும் உடனடியாக நின்று விடும்.

காயமும் விரைவில் ஆறிவிடும். அறுகம்புல் இயற்கை நமக்களித்த மிகப்பெரிய மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக் கூடியது. இவை பல நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. அருகம்புல்லை ஜூஸ் போட்டு குடித்தால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடை கொடுக்கும். அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

மாலை வேளையில் 200 மில்லி அளவுக்கு குடிக்கலாம். அருகம்புல் சாற்றில் வைட்டமின் ஏ சத்து உள்ளதால் உடல் புத்துணர்ச்சி ஏற்படும். இதனை குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம். நம் உடலில் உள்ள ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேர் உதவியாக உள்ளது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன் ரத்த சோகை மற்றும் ரத்த அழுத்தத்தையும் இந்த சாறு சீராக்குகிறது.

மேலும் வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் இந்த அருகம்புல் சாறை அருந்தி வந்தால் அதிலிருந்து முற்றிலுமாக விடுபடலாம். இது உடல் சூட்டையும் தணிக்கிறது. மேலும் பல பிரச்சினைகளுக்கு இந்த அருகம்புல் ஜூஸ் சிறந்த ஒரு தீர்வாக உள்ளது.

Exit mobile version