பாகிஸ்தானில் நடைபெறும் மிகப்பெரிய போராட்டம்

0
92
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஜீலம்- நீலம் ஆற்றின் குறுக்கே கோஹலா என்ற இடத்தில் அணை கட்டி 1,124 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடர்பாக சீனா, பாகிஸ்தான் அரசுகள் மற்றும் சீன நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு 5.8 பில்லியன் டாலர் செலவாகும். இந்த திட்டத்திற்கு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  நீலம் – ஜீலம் ஆற்றில் சீன நிறுவனங்களால் பெரிய அணைகள் கட்டப்படுவதை எதிர்த்து பாகிஸ்தானின் முசாபராபாத் நகரில் நேற்று இரவு பெரிய போராட்டங்களும் தீபந்த பேரணியும் நடைபெற்றது. தொடர்ந்து பலநாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சினையை சர்வதேச அளவிற்கு எடுத்து செல்லும் வகையில் டுவிட்டரில் #SaveRiversSaveAJK என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்தனர்.