Thanjavur: வயிற்று வலி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற 9ஆம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மீது பாலியல் குற்றங்கள் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான செய்திகள் நாள்தோறும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவி 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது.
இதனால் அந்த மாணவியை தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள். அப்போது மாணவியை மருத்துவர்கள் சிகிச்சைக்காக பரிசோதனை செய்து இருக்கிறார்கள். மேலும் பரிசோதனை முடிவில் அந்த மாணவி கர்ப்பமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் மாணவியின் பெற்றோர்.
இந்த நிலையில் அந்த மாணவிக்கு மருத்துவ மனையில் பெண் குழந்தை பிறந்து உள்ளது. பெற்றோர்கள் அந்த மாணவியின் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது,9 ஆம் வகுப்பு படித்து வரும் இந்த மாணவி அதே பகுதியில் உள்ள 10 ஆம் வகுப்பு மாணவனை காதலித்து வந்ததாகவும் அவர் தான் குழந்தைக்கு அப்பா என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
மேலும் மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன் மீது மாணவியின் பெற்றோர்கள் வல்லம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்கள். காவல்துறையினர் மாணவியை சீரழித்த 15 வயதுடைய 10ஆம் வகுப்பு மாணவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்து உள்ளார்கள். இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.