நீடிக்கும் பாமக – பாஜக தொகுதி பங்கீடு இழுபறி !
இன்னும் சில தினங்களில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான ஒரு கூட்டணி, பாஜக தலைமையிலான ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தும் தேர்தலை சந்திக்க உள்ளது.
அவ்வாறு பாஜகவில், அதிமுகவின் ஒ. பன்னீர்செல்வத்தின் ஆதாரவார்கள் அணி, டிடிவி தினகரன், பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி இட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக கட்சிக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது அனைவரும்அறிந்ததே இப்போது அந்த பத்து தொகுதிகள் எவை எவை என்பதை அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் சேலம், தருமபுரி, ஆரணி, கடலூர், பெரும்பாலும், அலங்காரம், திண்டுக்கல், காஞ்சிபுரம் ஆகிய எட்டு தகுதிகளை அறிவித்துள்ளது, மயிலாடுதுறை மற்றும் கன்னங்குறிச்சி தொகுதிகளை ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்தாகும் போதே இந்த இரண்டு தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டது குறிபபிடதக்கது.
ஆனால் தற்போது மயிலாடுதுறை தொகுதியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கேட்டு வருவதாகவும் அதற்காக தான் இன்னும் அந்த கட்சி கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து போடவில்லை எனவும் தெரியவந்துள்ளது, மேலும் கன்னங்குறிச்சி தொகுதியில் பாஜக நேரடியாக போட்டியிட போவதாகவும் தெரிகிறது.
எனவே பாமாக கட்சிக்கு இந்த இரண்டு தொகுதிகளுக்கு பதிலாக திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட ஏதேனும் வேறு தொகுதியை ஒதுக்கவுள்ளதாகவும் தெரிகிறது.
எனவே இன்று மாலைக்குல் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை நிறைவு பெற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.