BJP: தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களைஇழிவாக பேசிய எழுத்தாளர் ஓவியாவை கைது செய்ய பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் கடந்த நவம்பர் மாதம் 3 மூன்றாம் தேதி பிராமணர் பாதுகாப்பிற்காக பி.சி.ஆர் சட்டம் தேவை என இந்து மக்கள் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது. அதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். பின் நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து பேசியது சர்ச்சைக்குரிய பொருளாக மாறியது. மேலும் தெலுங்கு பேசும் மக்கள் பற்றி அவதூறாக பேசியதாக காவல் நிலையத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இதனால் தலைமறைவான கஸ்தூரி, முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றம் நாடினார் இருப்பினும் அவருக்கு ஜாமீன் வழங்க நீதி மன்றம் மறுத்தது. அதன் பிறகு போலீசார் தனிப்படை அமைத்து தீவிராக தேடி வந்த நிலையில் ஆந்திராவில் கடந்தத் 17 ஆம் கைது செய்யப்பட்டார். பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொர்பாக நேற்று நீதி மன்றத்தில் நடத்தது.
அதில் நடிகை கஸ்தூரி தனது இரண்டாவது குழந்தைக்கு ஆடிஸம் நோய் இருப்பதையும், தான் ஒரு சிங்கிள் பேரன்ட் நான் தான் என் குழந்தையை பார்த்து கொள்ள வேண்டும் என்று சுட்டி காட்டி தன் தரப்பு வாதங்களை முன் வைத்தார். அதனால் எந்த வித மறுப்பும் இன்றி நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதி மன்றம். இது குறித்து பாஜக மாநில துணைத்தலைவர் நாரயணன் திருப்பதி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியீட்டு இருக்கிறார்.
அதில் தெலுங்கு மக்களை அவதூறாக பேசி இருக்கிறார் என நடிகை கஸ்தூரியை கைது செய்து சிறையில் அடைத்தது திமுக அரசு. ஆனால் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களைஇழிவாக பேசிய எழுத்தாளர் ஓவியாவை இன்னும் கைது செய்யாமல் காத்து இருப்பது ஏன் கேள்வி எழுப்பி பதிவி ஒன்றை வெளியிட்டுள்ளார்.