டெல்லியில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு பாஜக கட்சிதான் காரணம்! முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி!!
டெல்லியில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்துக்கு பாஜக கட்சியின் தலைமையிலான மத்திய அரசும் ஹரியானா அரசும் தான் காரணம் என்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக மழை இல்லாத நிலையிலும் டெல்லியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் பாஜக கட்சியும் ஹரியானா அரசும்தான் காரணம். பாஜக கட்சியி ன் தலைமையிலான மத்திய அரசும் ஹரியானா அரசும் வேண்டும் என்றே டெல்லி நோக்கி தண்ணீரை திறந்துவிட்டுள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் சௌரவ் பரத்வாஜ் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் “கடந்த நான்கு நாட்களாக டெல்லியில் மழை இல்லை. இருந்தும் யமுனை ஆற்றில் கிட்டத்தட்ட 208 அடிக்கும் மேல் தண்ணீரின் அளவு எட்டியுள்ளது. ஹத்னிகுந்த் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வழக்கமாக மேற்கு கால்வாய், கிழக்கு கால்வாய் மற்றும் யமுனை ஆற்றின் வழியாக திறந்து விடப்படும்.
ஆனால் வேண்டும் என்றே கடந்த ஜூலை 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை உள்ள நாட்களில் தண்ணீரானது யமுனை ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. அதுவும் தலைநகர் டெல்லியை நோக்கியே வேண்டுமென்றே திறந்துவிடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் வழியாக திறந்துவிடப்படவில்லை” என்றார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் இதே குற்றச்சாட்டை கடந்த ஜூலை 14ம் தேதி பாஜக கட்சியின் மீது வைத்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜக கட்சி சார்பில் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை.